நீண்ட காலமாக காதலித்து வரும் நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடியின் திருமணம் குறித்து அவ்வப்போது ஏதாவது ஒரு தகவல் வெளியாவது வழக்கம். அந்த செய்திக்கு அவர்கள் மறுப்பு தெரிவிப்பதும் வாடிக்கையாக நடந்து வருகிறது.
இந்நிலையில் தற்போதுள்ள கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி, தங்கள் திருமணத்தை மிக எளிமையாக நடத்த நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கோயிலில் வைத்து திருமணம் செய்துகொள்ள அவர்கள் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இம்மாத இறுதிக்குள் திருமணத்தை நடத்தி முடிக்க அவர்கள் திட்டமிட்டு வருகிறார்களாம். இது உண்மையா அல்லது வதந்தியா என்பது சம்பந்தப்பட்டவர்கள் சொன்னால் தான் உறுதியாக தெரியவரும்.
நயன்தாரா கைவசம் தற்போது மூக்குத்தி அம்மன், நெற்றிக்கண், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் இருக்கின்றன. இதில் நெற்றிக்கண் படம் விக்னேஷ் சிவனின் தயாரிப்பு. காத்துவாக்குல ரெண்டு காதல் படத்துக்கு அவர் தான் இயக்குனர் என்பது குறிப்படத்தக்கது.
https://www.instagram.com/p/B6ftwhPBiCl/?igshid=15s454lei7kue