கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘துருவ நட்சத்திரம்’. இப்படத்தை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே 2017ல் படத்தின் டீசரை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
வழக்கம் போல அவருடைய இந்தப்படமும் மூன்று வருடங்களாக தாமதமாகி வருகிறது. இந்நிலையில் படத்தின் இறுதிக்கட்ட வேலைகளை ஆரம்பித்துவிட்டதாகவும், விரைவில் விக்ரம் டப்பிங் பேச உள்ளார் என்றும் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.
https://www.instagram.com/p/BjsX8r2BJuO/?igshid=1wn0zwlnyzc51
‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் கதாநாயகியாக நடித்த ரித்து வர்மா இப்படத்தில் தான் முதலில் நடிக்க ஒப்பந்தமானார். கொரானோ ஊரடங்கு முடிவதற்குள் படத்தின் வேலைகளை கௌதம் மேனன் முடித்துவிடுவார் என்று எதிர்பார்க்கலாம்.
அதே சமயம் விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படத்திற்கு முன்னதாகவே இப்படம் வருமா என்பதை கொரானோ நிலைமைகள் சீரடைந்த பிறகே சொல்ல முடியும்.