ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பென்குயின். கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இந்த படத்தின் டீஸர் சில தினங்களுக்கு முன் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. ஜூன் 19-ம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாக உள்ள இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடியாகவும், மலையாளத்தில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிறது.

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு 53 நாட்களில் இந்த படம் எடுத்து முடிக்கப்பட்டது. இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை இந்த படம் ஏற்படுத்தியது. போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் முடிந்து, ரிலீஸுக்கு காத்திருந்த இப்படம் கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டது
தற்போது இந்த படத்தின் ட்ரைலர் நாளை வெளியாகவுள்ளது. தனுஷ், நானி மற்றும் மோகன் லால் போன்ற உச்ச நட்சத்திரங்கள் இந்த ட்ரைலரை வெளியிடவுள்ளனர்