fbpx
Thursday, January 21, 2021
Home News Latest News முக அங்கீகார தொழில்நுட்பத்திற்கு ஓராண்டு தடை விதித்த அமேசான்

முக அங்கீகார தொழில்நுட்பத்திற்கு ஓராண்டு தடை விதித்த அமேசான்

அமெரிக்காவில் குற்றவாளிகளை கண்டறிய போலீசாருக்கு உதவும் தனக்கு சொந்தமான முக அங்கீகார தொழில்நுட்பத்தை தற்காலிகமாக ஓராண்டுக்கு பயன்படுத்த அமேசான் தடை விதித்துள்ளது.

அமெரிக்காவில் முக அங்கீகார தொழில்நுட்பம் குறித்து விவாதம் நீண்டுக்கொண்டிருந்த நிலையில், அமெரிக்காவின் மினியாபொலிசில், போலீஸ் அதிகாரி ஒருவர், தனது முழங்கலால் கழுத்தில் நெருக்கியதில், ஜார்ஜ் பிளாய்டு என்ற ஆப்ரிக்க அமெரிக்கர், மூச்சுத் திணறி உயிரிழந்தார். ஜார்ஜ் பிளாய்டின் மரணம், போலீசார் பயன்படுத்தும் முக அங்கீகார தொழில்நுட்பத்தின் நம்பகத்தன்மை குறித்து விமர்சனத்தை ஏற்படுத்தியது. ஜார்ஜ் பிளாய்டு மரணத்தை தொடர்ந்து இனரீதியான விவரக்குறிப்பு மற்றும் வெகுஜன கண்காணிப்புக்கு முக அங்கீகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஐ.பி.எம் தடை விதித்த நிலையில், அமேசான் நிறுவனமும் முக அங்கீகார தொழில்நுட்பத்தை பயன்படுத்த தடை விதித்துள்ளது.

முக அங்கீகார தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை நெறிமுறைப்படுத்த அரசு வலிமையான விதிமுறைகளை வைக்க வேண்டுமென கோருகிறோம். சமீப காலமாக காங்கிரஸ் இந்த சவாலை ஏற்க தயாராக உள்ளதாக தெரிகிறது. இந்த ஓராண்டு தடை காலம் பொருத்தமான விதிகளை அமல்படுத்த அமெரிக்க பார்லி.,யான காங்கிரசுக்கு போதுமான அவகாசமாக இருக்குமென நம்புகிறோம். கோரிக்கை விடுத்தால் உதவுவதற்கு தயாராக உள்ளோம் என அமேசான் தனது அறிவிக்கையில் தெரிவித்துள்ளது.

மற்ற முக அங்கீகார தொழில்நுட்ப அமைப்புகள் போலன்றி, அமேசானின் Recognition செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஆயிரக்கணக்கில் சேமித்து வைக்கப்பட்டுள்ள போலீசாரின் தரவுகளில் உள்ள புகைப்படத்தோடு ஒப்பிட்டு முடிவுகளை தெரிவிக்கும். கடந்த காலங்களில், அமேசான் தனது முக அங்கீகார தொழில்நுட்பம் சார்பு இன்றி செயல்படுவதாக வாதாடியது. அதே நேரத்தில் சட்டரீதியான அமைப்புகளுக்கு பயன்படுத்த அனுமதி அளிப்பதாக கூறியிருந்தது. அமேசான் தனது முக அங்கீகார தொழில்நுட்பத்தை காணாமல் போன குழந்தைகளை கண்டறியவும், கடத்தலை தடுக்க மனித உரிமை அமைப்புகளுக்கு தொடர்ந்து அளிப்பதை உறுதி செய்துள்ளது.

மற்ற முக அங்கீகார தொழில்நுட்பத்தை போன்று அமேசானின் முக அங்கீகார தொழில்நுட்பத்தில் கறுப்பு நிறத்தவரை அடையாளம் காண்பதில் பிரச்னை உள்ளது. 2019ல் நடத்தப்பட்ட ஆய்வில், கறுப்பினத்தவரின் பாலினத்தை அடையாளம் காண்பதிலும், கறுப்பின பெண்ணை ஆணாகவும் மாற்றி காட்டுவதாக கண்டறியப்பட்டது. அதேநேரத்தில் வெள்ளை நிறத்தவரை கண்டறிவதில் எவ்வித குளறுபடிகளும் இல்லை.

Source from Dinamalar

Alex
Alex is an Engineer with over 5 years experience in the field. Alex specialises in Engineering, Health and Agriculture.

Leave a Reply

- Advertisment -

Most Popular

“நான் ஒரு ஆரி ஆதரவாளன் இல்ல ஆனா”… விஜய் டிவி பிரபலம் வெளியிட்ட பதிவு பற்றிய பரபரப்பு தகவல்.

விஐய் தொலைக்காட்சி பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சுவார்சியமாகவும் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரங்களில் Freeze டாஸ்க் நடைபெற்றது....

Bigg Boss – 4 காதல் மன்னன் பாலாஜி முருகதாசுக்கு ரெட் காட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்படுவாரா???

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ்4 நிகழ்ச்சியில் அனுதினமும் புதுப்புது திருப்பங்கள் அரங்கேறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் பாலாஜி முருகதாசுக்கு...

Samsung Group titan Lee Kun-hee dies aged 78

Lee Kun-hee, the chairman of South Korea's largest conglomerate, Samsung Group, has died aged 78.

குழந்தைகளுக்கு ஒவ்வாமை நோய் ஏற்படாமல் இருக்க எதனை எப்போது செய்ய வேண்டும் தெரியுமா??????

முட்டையை உட்கொள்வதால் இது புரதம் மற்றும் சில ஊட்டச்சத்தை உடலுக்கு வழங்குகின்றது. இவற்றை பெற்றோர்கள் குழந்தைகள் உணவை மெல்லுவதற்கு எளிதாக இருப்பதால் , குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை...

Recent Comments