
தனுஷின் நான் ருத்ரன் படம் தான் கோலிவிட்டின் தற்போதைய ஹாட் டாப்பிக். கைவிடப்பட்டதாக கருதப்பட்ட படத்தை தனுஷ் மீண்டும் எடுக்கப்போவதாக செய்தி வெளியானதில் இருந்து கொரோனாவையும் மீறி பரபரப்பாகியுள்ளது கோலிவுட்.
தனுஷ் இயக்கத்தில் உருவாக உள்ள நான் ருத்ரன் வரலாற்று படத்தில் ஹீரோவாக நடிக்க இருப்பது தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா. அவருக்கு ஜோடியாக அதிதி ராவ் ஹைதாரி நடிக்கிறார். இவர்களுடன் சரத்குமார், எஸ்.கே.சூர்யா, ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தனுஷும் கெஸ்ட் ரோல் செய்கிறார்.
இந்நிலையில் இப்படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. நான் ருத்ரன் படத்தில் ஹீரேவாக நடிக்க முதலில் ரஜினியிடம் தான் கால்ஷீட் கேட்டிருக்கிறார் தனுஷ். ஆனால் தொடர்ந்து படங்களில் நடித்து வந்ததால் கால்ஷீட் பிரச்சினை காரணமாக தனுஷ் பட வாய்ப்பை நிராகரித்துவிட்டாராம் ரஜினி.
அதன் பிறகு தான் நாகார்ஜுனாவிடம் கதை சொல்லியிருக்கிறார் தனுஷ். அவருக்கு கதையும், கதாபாத்திரமும் பிடித்து போகவே உடனே ஓகே சொல்லிவிட்டாராம். எனவே ரஜினி நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் தான் நாகார்ஜுனா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.