fbpx
Monday, January 18, 2021
Home Lifestyle இலங்கையின் கரு சுமக்கும் கன்னிகள் - ஒரு ஆராய்ச்சி கட்டுரை

இலங்கையின் கரு சுமக்கும் கன்னிகள் – ஒரு ஆராய்ச்சி கட்டுரை

வணக்கம்

     இன்றைய சமுதாயம் நாள்தோறும் பல மாற்றங்களை கண்டுவருகிறது. அவற்றுள் பல நமக்கு சாதகமாய் இருப்பினும் சில மாற்றங்கள் நமக்கு பதகமாகவே அமைந்து விடுகின்றன. இன்றைய காலத்தில் பெண்களுக்கு எதிராக பல வன்கொடுமைகள் ஆங்கங்கே நடந்தேறிய வண்ணம் உள்ளன. அவற்றுள் இளம் பெண்கள் திருமணத்திற்கு முன்பே கருத்தரிப்பது இன்றைய சமுதாயத்தில் அதிகரித்து வருகிறது. அதிலும் இலங்கையில் இளம் பெண்கள் திருமணத்திற்கு முன்னரே கருத்தரிப்பது மிகவும் வேதனை அளிக்க கூடிய ஒன்றாகும்.

     யுனிசெப்பின் குழந்தை திருமண அடிப்படை மதிப்பீடு 2015 ஆம் ஆண்டின் படி, இலங்கையில் 12 முதல் 17 வயதிற்கு உட்பட்ட 20,780க்கும் மேற்பட்ட சிறுமிகள் திருமணமானவர்கள்  அல்லது வயதிற்கு வருவதற்கு முன்பு உறவுகளை இணைத்துகொள்வதில் ஆர்வம் காட்டுபவராய் உள்ளனர். மேலும் குடும்ப சுகாதார பணியகத்தின் கூற்றுப்படி , பதிவு செய்யப்பட்ட அணைத்து கர்பங்களில் 5.3 சதவீதம் டீன் ஏஜ் கர்ப்பமாகும். இலங்கையில் தற்போதைய சமூக கலாச்சார நடைமுறைகள் மற்றும் சட்ட , பொருளாதார மற்றும் சமூக பாதுகாப்பு தொடர்பான காரணிகள் ஆகியவை குழந்தை திருமணம் மற்றும் டீனேஜ் கர்ப்பத்திற்கு முக்கிய காரணிகலாகும்.

     மக்களிடையே போதிய பாலியல்சார் அறிவின்மையே இத்தகு குற்றங்கள் நடைபெற காரணிகளாய் அமைகின்றன. பள்ளி பருவத்தில் பாலியல் கல்வி முறையே கற்பிக்க தவறியமையே இத்தகு குற்றங்களுக்கு பெருமளவு காரணிகளாய் அமைந்து விடுகின்றன.

     இத்தகைய தங்கள்  இளமை காலத்திலே சிசுவினை சுமக்கும் பெண்கள் உடலளவிலும் , மனதளவிலும் பலவீனம் அடைகின்றனர்.இலங்கையில் நடத்தபெற்ற கணக்கெடுப்பின்படி ஐம்பது சதவிதத்திற்கும் மேற்பட்ட பெண்களின் பிரசவ வயது பத்தொன்பதாய் காணப்பெருகிறது. அதிலும் எண்பது சதவிதத்தினர் ஆறு முதல் பதினோராம் வகுப்பில் படிக்கும் மாணவிகளாய் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின்  ஆய்வு முடிவுகள் கூறுகின்றன .

     மேலும் சமூகத்தில் பொருளாதார வசதியில் மிகவும் பின்தங்கி உள்ள பெண்களே இதில் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகின்றனர். இவர்கள் அதிகம் கல்வி பயிலும் வாய்ப்பினை பெற்றிருக்கவில்லை என்பது இங்கு கவனிக்க தகுந்த விடயமாகும்.பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வீட்டிலே விடுத்து பொருளிட்ட வேண்டிய சூழலில் உள்ளமையால் , தங்கள் குழந்தகளுக்கு வேண்டிய உரிய பாதுகாப்பினை தர இயலாமல் போகிறது. இது தங்கள் குழந்தையின் மிதான வன்முறைக்கு ஒரு வாய்ப்பாய் அமைகிறது. இளம் வயதில் கருவுறும் பெண்களில் பலர் உயர் இரத்த அழுத்தம், குறைப்பிரசவம், குறைந்த பிறப்பு எடை மற்றும் அதிகரித்த குழந்தை , நோயுற்ற தன்மை மற்றும் இறப்பு போன்ற நிலைக்கு ஆளாவதாய் ஐக்கிய நாடுகள் சபையின்  ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது.

இளம் வயதில் கருவுறும் பெண்களில் மூன்றில் ஒருவர் மனநலம் குன்றியவர் என் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன . மேலும் இது அவர்களின் கல்வி , வேலைவாய்ப்பு , நீண்ட கால வாழ்கை லட்சியம் போன்றவற்றை பாதிக்கிறது.

ஒருமுறை 2009 ஆண்டின் இறுதி மாதத்திலிருந்து அதன் பிந்தைய மாதத்தின் பாதி வரை ,கண்டி என்னும் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஒரு ஆய்வு மேற்கொள்ள பட்டது. அதில் மொத்தம் 174 மாதிரிகள் சோதனைக்கு எடுத்து கொள்ள பட்டன.அந்த ஆய்வானது பெண்கள் கருத்தரித்த மறுநாளில் அவர்களிடம் நடத்திய ஆய்வாகும். அந்த ஆய்வுமுறை சில கேள்விகளுக்கு பதில் சொல்லும் விதமாய் அமைந்தது.அதன் முடிவில் குறைந்த எடையுடன் பிறந்த குழந்தை என வகைபடுத்த 2.5 கிலோ தெரிவு செய்யப்பட்டது. குறை பிரசவம் என்பது 37 வாரங்களுக்கு முன்னதாக கருத்தரிக்கும் பிரசவங்கள் என கணக்கில் கொள்ளப்படிகிறது. இளமை கால மகபேறு என்பது அதிகம் ஆபத்தை விளைவிக்க கூடிய ஒன்று என்பதை ஐக்கிய நாடுகள் சபையின்  ஆய்வு முடிவுகள் கணிக்க தவறவில்லை.

மேலும் இது குறித்த விரிவான ஆராய்ச்சியினை மேற்கொள்ள பட்டது. அதில் ஒரு குழந்தையின் பெற்றோர் , அவர்களின் பொருளீட்டும் திறன் ஆகியன கருத்தில் கொள்ளப்பட்டது. மொத்தம்  182 பதின்பருவ கர்பிணிகள் இந்த ஆய்வில் அமர்த்த பெற்றனர். அவர்களின் வயது 15 முதல் 19 வரையிலாக இருந்தது.இதில் 97%  தங்கள் பெற்றோருடனோ அல்லது தங்கள் வாழ்கை துணையினோடா வாழ்ந்து வருபவர்களாய் இருந்தனர்.இதில் 16.5%  பெரி பர்டும் என்ற வகையுடைய மனஅழுத்தத்திற்கு ஆளாகியுள்ளது தெரிய வந்துள்ளது. அத்தகைய பெண்கள் பிரசுவித்த குழந்தைகளின் எடை 2.69 கிலோ என கணக்கிடப்பட்டுள்ளது.

இதில் குடும்ப இடையூறுகளை கணக்கில் கொள்ளப்படும் பொது ஐந்து நோயாளிகள் அவர்களின் சொந்த பெற்றோருடன் வாழ்ந்து வரவில்லை என்பது தெரிய வந்துள்ளது.மேலும்  எழுபதிற்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களின் ஒரு பெற்றோருடன் மட்டுமே ஆறு மாத காலத்திற்கும் மேலாக வாழ்ந்து வருகின்றனர் என்பது புலனாகி உள்ளது. இவர்களது கல்விநிலையும் மேல்நிலை கல்வி அல்லது அதற்கும் கீழே என ஐக்கிய நாடுகள் சபையினால் வகைபடுத்தப்  படுகிறது.

இத்தகைய குழந்தைகளின் பெற்றோர் வேலை வாய்ப்பற்றும், வேலை செய்ய தகுதியற்றும் , அல்லது போதிய படிப்பறிவற்றும் காணப்டுகின்றனர். இத்தகு மக்களின் மாத வருமானம் ரூபாய் 7515க்கு மேல் , 7515க்கு கீழ் என வகை படுத்த படுகிறது. பதின் பருவ அம்மாக்கள் , தங்கள் வாழ்வில் தங்களின் பெற்றோரை பிரிந்திருக்க நேரிட்டிருந்தால் அவர்கள் 2.32 மடங்கு இயல்பாக பெற்றோருடன் வளரும் குழந்தைகளை விட மனஅழுத்தத்திற்கு உள்ளாகுவர் என ஆய்வு முடிவுகள் கண்டறியப்பட்டுள்ளன.

இலங்கையில் உள்ள பதுல்லா என்னும் நகரத்தில் மக்கள் உடல் நலம் சார்ந்த மாதிரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் கேளிவி வடிவத்தில் இரண்டு நிலையிலான மக்களிடத்தில் சோதனை நடத்தப்பட்டது. அதில் இருபது வயதிற்கும் குறைவான கர்ப்பிணிகள் 450 பெண்களும், இருபது வயதிற்கும் கீழே உள்ள  கர்பிணி பெண்களின் கணவன்மார்கள் 150 பேரும் தெரிவு செய்யப்பட்டனர்.

இதன் முடிவில் 60 % இளம் கர்பிணி பெண்களும் அவர்தம் கணவன்மார்களும் ,முறையான திட்டமிடளுக்கு பிறகே கர்பம் தரிக்கப்பட்டுள்ளது  தெரிய வந்துள்ளது. இதில் 79% பதின் வயது கர்பிணிகளும் , 85% கணவன்மார்களும் அந்த கர்பத்தினை  ஏற்று கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. பெருபாலான இளம் வயது கர்பிணிகள் மிகவும் நிலையான மற்றும் அரவணைக்கும் குடும்பத்தை சார்ந்த சூழலில் இருப்பதாகவும், அதிலும் 94 % மிகவும் வசதி வாய்ந்த குடும்பத்தை சேர்ந்தோர் என கண்டறியப்பட்டுள்ளது.

இதில் இளம் பெண்களின் பெருபாலான கர்பங்கள் அவர்களின் விருப்பமின்றியும், மகிழ்ச்சியற்றும் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இத்தகு இளம் வயது கர்பினிகளிடத்தும் அவர்தம் கணவன்மார்களிடத்தும்  இனப்பெருக்கம் மற்றும் கருத்தடை அறிவின் நிலைகள் மிகவும் குறைவாகவே இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பதின் பருவத்தினருள் 46 % சதவித மக்களும் , 64% சதவித கணவன்மார்கள் மட்டுமே முதல் நிலை கலவியின் மூலமே கருத்தரிப்பு சாத்தியம் என்பதை அறிந்து வைத்துள்ளனர்.

இதுகுறித்து நடத்தப்பட்ட சமிபத்திய ஐக்கிய நாடுகள் சபையின்  ஆய்வு முடிவில் , இவ்வாறு இளம் வயதில் கர்ப்பம் அடைவோரின் எண்ணிக்கையில்   53.9 % சிங்கள மக்களாகவும், 29.6%  தமிழ்க்குடியை சார்ந்தவர்களாகவும் , 16.5 % இஸ்லாமிய இனத்தை சார்ந்தவராக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.மீதமுள்ள 61.3%  சிங்கள மக்களும், 34.2%  தமிழ்க்குடிமக்களும் , 4.5%  இஸ்லாமிய மக்களும் இளம் வயதில் கர்ப்பம் தரிக்காத பெண்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

1980- 2001 ஆண்டுகளுக்கு இடையே பிறந்த குழந்தைகளின் தாய்மார்கள் பதினைந்து முதல் பத்தொன்பது வயதை சார்ந்த வயதினர் ஆவர்.இந்த எண்ணிக்கை 1982ல் முப்பதிலும் 1988ல் இருபந்தைந்திலும் உயர்ந்துள்ளது. பதினைத்து முதல் பத்தொன்பது வயதினை உடைய கர்ப்பிணி பெண்கள் தங்களது பேரு காலத்தில் மரணம் சம்பவிப்பது அதிகரித்து வருகிறது.

இதில் பதினைந்து முதல் இருபத்தி நான்கு வயதுடைய பெண்களில்  17 % இறப்பு கர்பம் மற்றும் குழந்தை பேறினால் ஏற்படுகிறது. மேலும் 23 % பெண்களின் இறப்பு, கருவுற்ற இளம் பெண்கள் தங்களின் கருகலைப்பினால் ஏற்படுகிறது. இதற்கிடையே திருமணமாகாமல் கருத்தரிக்கும் பெண்கள் அது குறித்த குற்றுணர்ச்சியில் தற்கொலை செய்து கொள்ளும் போக்கும் அதிகரித்து வருகிறது.

இலங்கையில் நடத்தபெற்ற சமிபத்திய ஆய்வுகள் , பருவவயது முற்றுபெறும் தருவாயில் இருக்கும் பெண்கள அதிகஅளவில் இரத்தசோகை நோயிற்கு ஆளாகின்றனர்.பருவ வயதுடைய பெண்கள் உயர் இரத்த அழுத்தம் மற்றும் முன் சினைப்பருவ வலிப்பு நோயினால் பாதிக்கபட்டு வருகின்றனர்.

இளம்வயது பெண்மணிகளுக்கு பிறக்கும் குழந்தைகள் பெருபாலும் போதிய வளர்ச்சியற்ற குழந்தைகளாகவும், குறைந்த எடை உடைய குழந்தைகளாகவும் காணப்படுகின்றனர். பிரசவத்தில் ஏற்படும் சிக்கல்கள் இறப்பிற்கு வகை செய்கின்றன.

ஐக்கிய நாடுகளின் அறிக்கையின் படி இளம் வயதில் பிரசவிக்க படும் குழந்தைகளால் பெருமளவு பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடுகிறது. மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள பெண் ஒருவள் இளம் வயதில் பிரசுவிக்க நேர்ந்தால் மேற்கொண்டு  அவளின் படிப்பும் , பணியும் கேள்விக்குறியாகிறது. அதுமட்டுமின்றி அந்த பெண்ணும் தன் குழந்தைக்கு போதிய அளவு படிப்பும் , பொருளாதார வசதியும் செய்து கொடுக்க முடியாமல் போகிறது. தேயிலை தோட்டத்தில் வளரும் இளம் பருவத்து பெண்களுக்கு கர்ப்பம் என்பது மிக பெரிய பொருளாதார நெருக்கடியை உண்டாகிறது. இளம் பெண்களும் , நடுத்தர பெண்மணிகளும் தங்கள் பதினாங்கு வயது முதற்கொண்டே இந்த தேயிலை தோட்டத்தில் பணியமர்த்த படுவதால் ,அவர்கள் வாழ்வு பெரும் சுமையாகி போவது தவிர்க்க முடியாமல் போகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு, அதாவது  2016யில் பெரும்பாலான கருத்தரிபுகள் திருமணத்திற்கு முன்னமே நடைபெறுவது கண்டறியப்பட்டுள்ளது . ஆசியா கண்டதை பொறுத்த மட்டில் இரண்டு சதவீத பெண்கள் தங்கள் முதல் குழந்தையை திருமணத்திற்கு முன்னமே பெற்று எடுப்பதாய் ஐக்கிய நாடுகள் சபையின்  ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது. திருமணம் ஆகாத பெண்களின் கர்பங்கள் முறையான திட்டமிடல் இன்றியும் , தேவையற்றும் கருத்தரிப்பதால் அவை அனைத்தும் கருகலைப்பில் சென்று முடிவடைகிறது.

இலங்கையில் பதினைந்து முதல் இருபத்தி நான்கு வயது வரை உள்ள பெண்கள் தேவையற்றும் , முறையற்றும் கருத்தரிப்பது வடிக்கையாகி வருகிறது. திருமணத்திற்கு முன்னால் ஏற்படும் உறவுகளால் ஏற்படும் கருத்தறிப்புகள் ,குடும்பத்தாலும்  சமுதாயத்தாலும்  ஏளனம் செய்ய படுவதோடு மட்டுமின்றி ஒரு இக்கட்டான மனநிலைக்கு அந்த பெண்ணை இட்டு செல்வதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்து உள்ளது.

இதனால் அவள் ரகசியமாக தன் கருவை கலைக்க முயற்சிக்கிறாள்.இத்தகு செயல்களால் பெண்களின் வாழ்வு இலங்கையில் பெரும் கேள்விகளுக்கு உள்ளாகி இருக்கிறது. எண்பது சதவீத கருகலைப்பு கள் தனியார் மருத்துவமனையில்   நடைபெற்று வருகிறது. மீதமுள்ள இருபது சதவீத கருகலைப்புகள் ஏனைய சில வழிகளில் நடைப்பெற்று வருகின்றன.

சில்வா என்ற அமைப்பு 2 %- 8.6% கருகலைப்புகள் பத்தொன்பது வயதிற்கும் கிழே நடைபெறுவதாய் தெரிவிக்கின்றன. 2003 ஆம் ஆண்டு 150 முதல் 175 வரை முறையற்ற கருகலைப்புகள் நடந்தேறி இருக்கின்றன. இவை அணைத்தும் பதினைந்து முதல் இருபத்தி நான்கு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளாகும். இதில் பெரும்பாலநோர் திருமணம் ஆனவர்களாய் காணப் பெருகின்றனர்.

2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக மக்கள் தொகை நாளில் , இலங்கையில் நாளொன்றிற்கு 658 முறையற்ற கருத்தறிப்புகள் நடைபெறுவதாய் கொளும்புவில் உள்ள சுகாதார கல்வி இயக்கம் தெரிவிக்கிறது. ஆண்டோன்றிற்கு நடைபெறும் 340 பிறப்பு விகிதத்தில்  240 கருகலைப்புகள் நடைப்பெறுகின்றன.

     இளம் வயது பெண்கள் முறையற்ற பாலியல் உறவின் மூலம் கருத்தரிக்க படுவதால் , அவர்கள் எச்.ஐ.வி போன்ற கொடிய உயிர் கொல்லி நோய்க்கு ஆளாகின்றனர். 

     யுனிசெப் ,2004 ஆம் ஆண்டு வெளியிட்ட  அறிக்கையில் ஆண்கள் தங்கள் முதல் பாலியல் உறவினை பதினைந்து வயதிலும் , பெண்கள் பதினான்கு வயதிலும் கொள்வதாக தெரிவித்துள்ளது. 43% பள்ளி செல்லும் இளம் சிறார்கள் தங்கள் காதலன் / காதலியோடு தங்கள் முதல் பாலியல் உறவினை  கொள்வது கண்டறியப்பட்டுள்ளது. 46% பெண்கள் தங்களுடைய காதலர்களை தவிர்த்து நண்பர்களுடன் உறவு கொள்கின்றனர். 11% மக்கள் பாலியல் தொழிலார்களுடன் உறவு கொள்வதாய் யுனிசெப் அறிக்கை தெரிவித்துள்ளது.

பெண்களுக்கு கணிதன்மை என்பது திருமணம் ஆகும் தருணத்தில் கவனத்தில் கொள்ளப்படும் மிக முக்கிய ஒன்றாகும். ஆண்களுக்கு இதன் மேல் பெரிதும் முக்கியத்துவம் கொடுக்கபெறுவதில்லை. இந்த சமூகம் கணிதன்மை குறித்து பல கட்டுபாடுகளை பெண்களிடத்தில் வலியுறுத்தி வருகிறது.இலங்கையில் உள்ள 17-28 வயதுடைய மக்களிடமும் , திருமணமாகாத மக்களிடமும்  நடத்த பெற்ற கருத்து கணிப்பில் 57% ஆண்களும் 82% பெண்களும் திருமணம் ஆகும் பொது கன்னிதன்மையுடன் இருக்க விரும்புகின்றனர்.திருமணத்திற்கு முன்பு பாலியல் உறவுகொள்வதால் வரும் உடல் மற்றும் மனம் சார்ந்த சிக்கல்களை பெண்கள் அதிகம் தெரிந்து வைத்துள்ளமையால் பெண்கள் திருமணத்திற்கு முந்தைய பாலியல் உறவில் ஆர்வம் காட்டுவதில்லை.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள கூற்றுகளின் மூலம் நாம் அறியப்படுவது , தேயிலை தோட்டத்தை சார்ந்த மக்களிடையே இளம் வயது பெண்கள் திருமணத்திற்கு பிறகு கர்பம் தறிப்பது ஆதரிகப்படுகிறது. திருமணத்திற்கு முன்பு பாலியல் உறவு ஏற்றுகொள்ள படாததால் , திருமணம் தாண்டி கர்ப்பம் அடைவதும் ஏற்று கொள்ள படுவதில்லை.இத்தகைய செயல் அந்த பெண்ணின் குடும்பத்தை நிலைகுலைய செய்வதோடு மட்டுமின்றி அந்த பெண் குழந்தைக்கும் பெரும் அச்சத்தை விளைவிக்க கூடிய ஒன்றாய் அமைந்து விடுகிறது என ஐக்கிய நாடுகள் சபையின்  ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது.

இளம் பருவத்தினர் கருத்தரித்தல் பற்றிய போதிய அறிவினை பெற்றிருத்தலும் அதனை முறையென  கையாளுதலும் அவசியாமாகும்.இளம் பருவ மக்களே தங்கள் பாலியல் உறவினை பாதுகாக்பானதாய் அமைத்து கொள்ளலாமா வேண்டாமா என அவர்களே முடிவு செய்யும் அறிவினை பெற வழி செய்வது நம் கடமையாகிறது.

யுனிசெப் நாடு தழுவி எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் நாற்பதிற்கும் மேற்பட்ட இளம் பெண்கள் 15-19 வயதிற்கு உட்பட்டவர்களாய் இருப்பதாய் தெரிவித்து உள்ளது.அவர்கள் தங்கள் உடல் ஆரோக்கியம் , HIV தோற்று குறித்த அறிவினையும் கொண்டுள்ளனர். வெறும் 14% பள்ளி செல்லும் விடலை பருவத்தினர்  மட்டுமே கருத்தரித்தல் குறித்த போதிய அறிவினை பெற்றுள்ளனர். யுனிசெப் நடத்திய கணக்கெடுப்பில் 50% மக்கள் நல்ல பதிலை அளித்திருக்கின்றனர்.

தேயிலை தோட்டத்தில் வளரும் விடலை பருவத்தினர் , பாலியல் குறித்த முதல் அறிவினை தங்கள் பெற்றோர்களின் மூலமும் திருமணமான இளம் தம்பதியினர் மூலமும் அறிய பெறுகின்றனர். அங்குள்ள மக்கள் ஒரே அறையில் அணைத்து வயதினரும் படுத்து உறங்க வேண்டிய நிலையில் உள்ளமையால் , பாலியல் குறித்த பார்வை அவர்களுக்கு எளிதில் கிட்டுகிறது.

தேயிலை தொட்டத்து இளம் பருவ மக்கள் தங்கள் சொந்த சிக்கல்களை தங்கள் நண்பரிடத்தில் அதிகம் விவாதம் செய்கின்றனர். பெரும்பாலான விடலை பருவத்தில் இருக்கும் பெண்கள் , இதை தங்கள் ஆசிரியர்களிடம் விவாதிக்க தொடங்கியுள்ளனர்.

வீட்டில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடத்து  இது குறித்து பெரிதும் விவாதிக்க தங்குவதால் , அம்மா என்ற இடம் நண்பர்களால் நிரப்ப படுகிறது. பாலியல் குறித்த விடயங்கள் அவர்களது நண்பர்களிடத்தும் , சமவயதினரிடத்தும் புரனியாகவும் , கேளிக்கையாகவும், கதைகளாகவும் பகிரப்பட்டு வருகின்றன.

இளம் வயதினர் தங்கள் ஒத்த வயதுடைய நண்பர்களின் கருத்துகளுக்கு பெரிதும் முக்கியத்துவம் அளிக்கின்றனர்.இது ஐக்கிய நாடுகள் சபையில் 2016யில் நடத்தப்பட ஆய்வின் முடிவாகும்.

விபச்சார விடுதிகள்

     வறுமை கோட்டிற்கும் கீழே உள்ள மக்கள் தங்கள் பெண் குழந்தைகளை பாலியல் தொழிலுக்காக விற்பது அதிகரித்து வருகிறது. இலங்கையில் பெண்களை விட ஆண்களே பெரிதும் பாலியல் தொழிலுக்கு பயன்படுத்த பட்டு வருவதாக  ஐக்கிய நாடுகள் சபையில் 2016யில் நடத்தப்பட ஆய்வின் தெரிவிக்கிறது. ஆனால் இது குறித்த தகவல்கள் பெரிதும் வெளியிட படுவதில்லை.இது ஒரு பெரிய பாலியல் குற்றமாகவும் அங்கு கவனத்தில் ஏற்றுகொள்ள படுவதில்லை.

இலங்கையில் இளம்பருவத்தினரிடையே திருமணத்திற்கு முன்பே கருத்தரிப்பது அதிகரித்து வருகிறது.இதனால் இளம் சிறார்கள் திருமணத்திற்க்கு முன்பே கருத்தரிப்பது அதிகரித்து வருகிறது.மேலும் இது பாதுகாப்பற்ற உறவிற்கு வழி வகுக்கிறது. இத்தகைய முறையற்ற உடலுறவு எச்.ஐ,வி  போன்ற கடும் நோயினிற்கு ஆளாக நேரிடுகிறது. பதின் பருவத்தில் ஏற்படும் கற்பதினை கலைக்க முற்படுவதால் அவர்கள் உடல் நலம் பெரிதும் பதிக்கபடுவதோடு மட்டும் இல்லாமல் , பிற்காலத்தில் குழந்தை பேறு கேள்விக்குறியாகிறது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.

இந்த கட்டுரை வரையபட்டதன் முழு நோக்கம் , முறையற்ற பாலியல் உறவில் ஈடுபடுவதால் வரும் சிக்கல்களையும் , அதை தொடர்ந்து வரும் கர்ப்ப கால சிக்கல்களையும் , எச்.ஐ.வி  என்ற ஒரு நோயின் தீவிரத்தை முன்வைப்பதே ஆகும். முறையான பாலியல் கல்வியினை பள்ளி பருவத்தில் இருந்தே வழங்கபடல் வேண்டும் என்பதை இந்த கட்டுரை வலியுறுத்துகிறது.மேலும் ஆண் பெண் சமத்துவத்தை பேனுதலின் அவசியத்தையும் எடுத்துரைக்கும் வண்ணம் அமைந்துள்ளது.இந்த கட்டுரை ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என் நம்பிக்கை கொள்கிறேன்.

நன்றி .

Leave a Reply

- Advertisment -

Most Popular

“நான் ஒரு ஆரி ஆதரவாளன் இல்ல ஆனா”… விஜய் டிவி பிரபலம் வெளியிட்ட பதிவு பற்றிய பரபரப்பு தகவல்.

விஐய் தொலைக்காட்சி பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சுவார்சியமாகவும் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரங்களில் Freeze டாஸ்க் நடைபெற்றது....

Bigg Boss – 4 காதல் மன்னன் பாலாஜி முருகதாசுக்கு ரெட் காட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்படுவாரா???

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ்4 நிகழ்ச்சியில் அனுதினமும் புதுப்புது திருப்பங்கள் அரங்கேறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் பாலாஜி முருகதாசுக்கு...

Samsung Group titan Lee Kun-hee dies aged 78

Lee Kun-hee, the chairman of South Korea's largest conglomerate, Samsung Group, has died aged 78.

குழந்தைகளுக்கு ஒவ்வாமை நோய் ஏற்படாமல் இருக்க எதனை எப்போது செய்ய வேண்டும் தெரியுமா??????

முட்டையை உட்கொள்வதால் இது புரதம் மற்றும் சில ஊட்டச்சத்தை உடலுக்கு வழங்குகின்றது. இவற்றை பெற்றோர்கள் குழந்தைகள் உணவை மெல்லுவதற்கு எளிதாக இருப்பதால் , குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை...

Recent Comments