விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ்4 நிகழ்ச்சியில் அனுதினமும் புதுப்புது திருப்பங்கள் அரங்கேறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் பாலாஜி முருகதாசுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட உள்ளதாக, நடிகை வனிதா விஜயகுமார் கூறியிருக்கும் தகவல் பாலாஜியின் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அதாவது சில நாட்களாகவே சனம் ஷெட்டிக்கும் பாலாஜி முருகதாஸும் பிக்பாஸ் வீட்டில் எலியும் பூனையும் போல ஏகப்பட்ட சண்டைகள் நடைபெற்று வருகின்றன. மேலும் இருவரும் வரம்புமீறி ஒருவரை ஒருவர் டுபாக்கூர், தறுதல என மாறிமாறி திட்டி, அடித்துக்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த வாரம் நடைபெற்ற நீதிமன்ற டாஸ்கில் சனம் ஷெட்டி பாலா மீது புகார் ஒன்றை கொடுத்து இருந்தார். அதில் பாலாஜி அவரை அட்ஜஸ்ட் பண்ணி தான் அழகி பட்டத்தை பெற்றார் என்று கூறியதாக சனம்ஷெட்டி குறிப்பிட்டிருந்தார்.
இதனால் பாலாஜிக்கு சமூகவலைதளங்களில் பெரும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. எனவே, போன சீசனில் சரவணனுக்கு பண்ணியது போலவே பாலாஜி முருகதாசுக்கும் ரெட் கார்டு கொடுக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
மேலும் பிக் பாஸ் வீட்டில் இருந்து பாலாஜிக்கு ரெட் கார்டு கொடுத்து அனுப்பப்பட உள்ளதாக நடிகை வனிதா விஜயகுமார் கூறியிருக்கும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால் தான் பகல் நிலவு சீரியல் நடிகரான அசீமை பிக்பாஸ் குழுவினர் களமிறக்க போவதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறு பாலாஜி முருகதாஸ் இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படும் தகவல்கள், பாலாஜி ரசிகர்களை பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது.