
விஐய் தொலைக்காட்சி பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சுவார்சியமாகவும் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரங்களில் Freeze டாஸ்க் நடைபெற்றது. இந்த வாரம் டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் வெற்றி பெற்ற சோம்சேகர் நேரடியாக இறுதி வாரத்துக்கு தகுதி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மக்களின் வாக்குகளின் அடிப்படையில் ஆரி அவர்களும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.

இறுதிப் போட்டிக்கு அனைவரும் தயாராக உள்ள நிலையில், டைட்டிலை யார் கைப்பற்றுவார்கள் என்பதில் மக்கள் மனதில் பல்வேறு கருத்துக்களை ஏற்படுத்தியுள்ளது . எனினும் ஆரி தான் டைட்டில் கைப்பற்றுவார் என்று பலரும் யூகித்து வருகின்றனர்.

இந்நிலையில் விஜய் டிவி பிரபலம் மற்றும் இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தன் பிக்பாஸ் பற்றிய பல்வேறு கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். மேலும் ஆரிக்கு ஆதரவாகவும் சில பதிவுகளை எழுதியிருந்தார் என்பது பலராலும் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது.

அதனால் பலரும் அவரிடம் ‘நீங்கள் ஆரி ரசிகரா?’ போன்ற கேள்விகளைத் தொடுத்தனர். இதற்கு பதிலளிக்கும் விதத்தில் அவர் தற்போது ஒரு பதிவிட்டுள்ளார். அவர் கூறுகையில்”பலமுறை சொல்லிட்டேன் நான் ஆரி சப்போர்ட்டர் இல்லை. அங்க இருக்கிற போட்டியாளர்களில் ஆரி வென்றால் சமூகத்துக்கு நல்லது என்பது எனது பார்வை” என்று கூறியுள்ளார். இந்த பதிவை ஆரியின் ரசிகர்கள் பலரும் விரும்பிச் லைக் செய்து வருகின்றனர் என்பது சமூகவலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது .