fbpx
Saturday, January 23, 2021
Home Architecture புதிய வீட்டினை வாங்கும் முன்னர் கருத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்

புதிய வீட்டினை வாங்கும் முன்னர் கருத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்

ஒரு புதிய வீட்டைத் தேர்ந்தெடுப்பது ஒரே நேரத்தில் உற்சாகமாகவும் அதே நேரத்தில் அச்சம் நிறைந்த ஒரு செயற்பாடாகவும் இருக்கின்றது.

உங்கள் கனவு இல்லத்தினை வாங்குவது என்பது நீங்கள் செய்யும் மிகப்பெரிய கொள்வனவுகளில் ஒன்றாகும். ஏனெனில் 

நீங்கள் தான் உங்கள் பென்னான நேரத்தினை அங்கே செலவு செய்யப்போகின்றீர்கள். உங்களின் இன்றைய தெரிவே நாளைய வாழ்விடமாக அமைந்துவிடுகின்றது.

உங்கள் வாழ்க்கை முறை மற்றும் எது உங்களுக்கு மிக முக்கியமானது என்ன என்பதைப் பற்றி நீங்கள் உண்மையிலேயே சிந்திக்க வேண்டும். எனவே உங்கள் கனவுவில்லமானது உங்களை திருப்த்திப்படுத்த வேண்டும்.

அந்த சரியான புதிய வீட்டை நீங்கள் தேடும்போது கவனிக்க வேண்டிய சில காரணிகள் இங்கே:

உங்களால்உங்களின்வீட்டிற்குசெலவுசெய்யக்கூடியபணம்( Budget).  

உங்கள் கனவு இல்லத்தை வாங்குவதற்கு முன்னர் உங்கள் கையிருப்பில் இருக்கும் பணத்தின் பெறுமதி போதுமானதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

Sebastian Residencies Project

அதிகம் செலவு செய்ய எத்தனிக்காது உங்களின் கையிருப்பிற்கு (Budget) ஏற்றவாறு உங்களின் தெரிவு அமைய வேண்டும். சிலசமயங்களில் நீங்கள் வங்கிக்கடன்கள் (Bank Loans) மற்றும் உங்களின் ஆபரணங்களையும் அடகு வைக்கும் நிலமைகளுக்கும் தள்ளப்படுகின்றீர்கள். நீங்கள் கடனினைப் பெற்றுக்கொள்ளும் போது, ​​கடன் வழங்குபவர் பெரும்பாலும் கணிதக் கணக்கீட்டைச் செய்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள், அவர்கள் மேலும் உங்களின் எதிர்கால நிலைமைகளையோ அல்லது உங்களின் எதிர்கால செலவீணங்களையோ கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை ஆகவே, நீங்கள் கடன் வாங்க திட்டமிட்டுள்ள தொகை உங்களால் செலுத்த முடியுமான தொகை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். 

வீட்டின்அமைவிடம் (Location)

ஒரு வீட்டினை வாங்கும் போது வீட்டின் அமைவிடம் என்பது கருத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விடயம் ஆகும். எதிர்காலத்தில் Real Estate என்பது ஏற்ற இறக்கமாக இருந்தாலும் ஒரு சிறந்த அமைவிடம் (Location ) ஒரு சொத்தாகவே இருக்கும். நீங்கள் ஒரு பழமையான வீட்டை கவர்ச்சிகரமானதாக மாற்றலாம், ஆனால் பொருத்தமற்ற இடத்தை சிறந்ததாக மாற்ற முடியாது, இருப்பினும் நல்ல இடத்தில் உள்ள பண்புகள் இலாபகரமான முதலீடாகவே இருக்கும்.  

அதே நேரத்தில் உங்கள் வேலைக்கு அருகில் உள்ள ஒரு இடத்தைக் கண்டுபிடிப்பதும் மிகவும் நல்லது அது உங்கள் பொன்னான நேரத்தையும் உங்களின் மிகுதியான செலவீனத்தையும் மிகுதிப்படுத்தும்.

வீட்டைசுற்றியுள்ளஅயலவர்கள்( Neighborhood)

நீங்கள் வீட்டை வாங்கும் பணியில் நீங்கள் ஈடுபடுவதற்கு முன்பு முடிந்தால் சற்று வீட்டினை சுற்றியுள்ள அயலவர்கள் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பற்றிய தகவல்களை சிறிதளவேனும் அறிந்திருத்தல் அவசியமானதாகும். காண முடிந்தளவு அதன் சுற்றுப்புறத்தில் வசிக்கும் அயலவர்களை சந்திக்க முயற்சிக்கவும். நீங்கள் குடும்பம் சார்ந்த நபராக இருந்தாலும் இல்லாவிட்டாலும், மோசமான தாக்கங்கள் அல்லது சட்டவிரோத விஷயங்களில் ஈடுபடும் நபர்களைச் சுற்றி வாழ்வதற்கு யாவரும் விரும்புவதில்லை. நற்குணம் உள்ள அயலவர்கள் வசிக்கும் இடங்களில் வீட்டைத் தேடுவது முக்கியமான காரணிகளில் ஒன்றாகும்.

உள்கட்டமைப்புவசதிகள் (Infrastructure

ஒரு வீட்டை வாங்கும் போது, ​​கருத்தில் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய காரணி, இப்பகுதியில் அடிப்படை உள்கட்டமைப்புகளை (Roads, Electricity and Drinking water) வசதிகளை கொண்டுள்ளதா என்பதை உறுதி செய்தல் அவசியமாகும்.

 

1.புகையிரத நிலையத்திற்கான தூரம்(Train station )

2. இப்பகுதியில் போதுமான குடி நீர் வழங்கல் உள்ளதா? (Drinking water Connection).

3. தெரு விளக்குகள், தொலைபேசி மற்றும் இணைய இணைப்பு மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள் போன்ற வசதிகள் எளிதில் கிடைக்குமா? (Street lights, Telephone Line)

வீட்டினைப்பற்றியஆய்வு ( Inspection)

வீடு பற்றிய ஆய்வு (House inspection) அவசியம். இன்றைய சந்தைப்படுத்தல் நுட்பங்கள் ( marketing strategies )அதிகமாக உள்ள காலகட்டத்தில் நீங்கள் அவற்றைப் பார்க்கும்போது அதன் சொத்தை அழகாகக் காண்பிப்பதை உறுதிசெய்கிறார்கள் (Real Estates Brokers).

House interior

ஒப்புதல் சம்பந்தமான வரிசையில் கையொப்பமிடுவதற்கு முன்னர் அதன் தரம் (Condition of the house), பழுது (Repair)மற்றும் புதுப்பிப்புகளை (Cracks) விரிவாக சரி பார்க்க வேண்டும்.

விரிசல்களை சரிசெய்வதற்கான மொத்த செலவு(crack repairing cost), மற்றும் நீங்கள் வீட்டில் செய்ய விரும்பும் புதுப்பித்தல் (House new moderation Cost)பணிகள் கணக்கிடப்பட்டு, வீட்டை வாங்க முடிவு செய்வதற்கு முன் கருத்தில் கொள்ள வேண்டும், ஏனெனில் இது கொள்முதல் விலையை கணிசமாக அதிகரிக்கக்கூடும்.

வீட்டின்உள்அமைப்பு (Internal Plan)

உங்களின் வசதிக்கு ஏற்றபடி அறைகள் , குளியல் அறைகள் , சமையல் அறை என்பன இடவசதியாக உள்ளனவா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

House plan sri lanka

Leave a Reply

- Advertisment -

Most Popular

“நான் ஒரு ஆரி ஆதரவாளன் இல்ல ஆனா”… விஜய் டிவி பிரபலம் வெளியிட்ட பதிவு பற்றிய பரபரப்பு தகவல்.

விஐய் தொலைக்காட்சி பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சுவார்சியமாகவும் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரங்களில் Freeze டாஸ்க் நடைபெற்றது....

Bigg Boss – 4 காதல் மன்னன் பாலாஜி முருகதாசுக்கு ரெட் காட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்படுவாரா???

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ்4 நிகழ்ச்சியில் அனுதினமும் புதுப்புது திருப்பங்கள் அரங்கேறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் பாலாஜி முருகதாசுக்கு...

Samsung Group titan Lee Kun-hee dies aged 78

Lee Kun-hee, the chairman of South Korea's largest conglomerate, Samsung Group, has died aged 78.

குழந்தைகளுக்கு ஒவ்வாமை நோய் ஏற்படாமல் இருக்க எதனை எப்போது செய்ய வேண்டும் தெரியுமா??????

முட்டையை உட்கொள்வதால் இது புரதம் மற்றும் சில ஊட்டச்சத்தை உடலுக்கு வழங்குகின்றது. இவற்றை பெற்றோர்கள் குழந்தைகள் உணவை மெல்லுவதற்கு எளிதாக இருப்பதால் , குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை...

Recent Comments