fbpx
Saturday, January 23, 2021
Home Lifestyle Recipes கரமல் புடிங்

கரமல் புடிங்

தேவையான பொருட்கள்

1.சீனி − 4 மேசைகரண்டி

2.முட்டை – 3

3.பால்- 1 1/2 கப்

4. வெனிலா எசன்ஸ் – 1 மேசை கரண்டி

தயாரிபபதற்கான நேரம் – 30 நிமிடங்கள்

படிமுறை 1 – ஒரு பாத்திரத்தில்  3 மேசை கரண்டி சீனி இடவும்.தேவையான அளவு நீர் விட்டு சீனியை கரைத்துக்கொள்ளவும்.

சீனி பொன்னிறமாகும் வரை கரைக்கவும்.

படிமுறை 2 – பொன்னிறமான சூடான கரமலை ஒரு பாத்திரத்தில் ஊற்றவும்.

குறிப்பு : பாத்திரத்தின் எல்லா ஓரங்களிலும் கரமல் பட்டிருப்பதை உறுதி படுத்திக்கொள்ளவும்.அது புடிங் பாத்திரத்தில் ஒட்டாமல் எளிதாக வெளியே வருவதற்கு வழிவகுக்கும்.

படிமுறை 3 -இன்னொரு பாத்திரத்தில் 3 முட்டைகளை ஊற்றி  கொள்ளவும்

பின்பு முட்டைகளை நன்கு கலக்கியவுடன் 1  1/2 மேசை கரண்டி சீனியை இடவும்.

பின்பு 1 1/2 கப் பால் மற்றும் 1 மேசை கரண்டி வெனிலா எசன்ஸ் இட்டு நன்கு கலக்கிக்கொள்ளவும்

படிமுறை 4 –  இந்த கலவையை  கரமல் கலவை உள்ள பாத்திரத்தினுள் ஊற்றவும்.

பின்பு அப்பாத்திரத்தை  அலுமினிய தாள் கொண்டு சுற்றி மூடவும்.

படிமுறை 5 –  இன்னொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் 2 கப் தண்ணீர் விட்டு அதன் மேல் தட்டு ஒன்று வைத்து உயர் வெப்பத்தில் தண்ணீரை கொதிக்க விடவும்.அதற்கு பதிலாக புட்டு அவிக்கும் குழாயையும் பயன்படுத்தலாம்.

படிமுறை 6 – பின்பு அந்த தட்டின் மேல் அலுமினிய தாளால் மூடிய கரமல் கலவையை  வைத்து பாத்திரத்தை மூடி 10 நிமிடங்கள் – 15 நிமிடங்கள் வரை நடுத்தர வெப்பநிலையில் அவிக்கவும்.

பின்பு ஒரு முள்ளு கரண்டியை பயன்படுத்தி புடிங் நன்றாக வெந்துள்ளதா என்பதை தெரிந்து கொள்ளவும்.

படிமுறை 7 – பின்பு அதை வெளியே எடுத்து அதனை ஆற விடவும்.பின்பு குளிர்சாதன பெட்டியில் 1 மணி நேரம் வைத்து நன்கு குளிர்ந்தவுடன் எடுத்து பரிமாறவும்.

Caramel Pudding

Leave a Reply

- Advertisment -

Most Popular

“நான் ஒரு ஆரி ஆதரவாளன் இல்ல ஆனா”… விஜய் டிவி பிரபலம் வெளியிட்ட பதிவு பற்றிய பரபரப்பு தகவல்.

விஐய் தொலைக்காட்சி பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சுவார்சியமாகவும் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரங்களில் Freeze டாஸ்க் நடைபெற்றது....

Bigg Boss – 4 காதல் மன்னன் பாலாஜி முருகதாசுக்கு ரெட் காட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்படுவாரா???

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ்4 நிகழ்ச்சியில் அனுதினமும் புதுப்புது திருப்பங்கள் அரங்கேறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் பாலாஜி முருகதாசுக்கு...

Samsung Group titan Lee Kun-hee dies aged 78

Lee Kun-hee, the chairman of South Korea's largest conglomerate, Samsung Group, has died aged 78.

குழந்தைகளுக்கு ஒவ்வாமை நோய் ஏற்படாமல் இருக்க எதனை எப்போது செய்ய வேண்டும் தெரியுமா??????

முட்டையை உட்கொள்வதால் இது புரதம் மற்றும் சில ஊட்டச்சத்தை உடலுக்கு வழங்குகின்றது. இவற்றை பெற்றோர்கள் குழந்தைகள் உணவை மெல்லுவதற்கு எளிதாக இருப்பதால் , குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை...

Recent Comments