உலகையே அச்சசுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றால், இத்தாலியில் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணித்தியால இறுதி நிலவரப்படி, இத்தாலியில் ஒட்டுமொத்தமாக 30,201பேர் உயிரிழந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதற்கமைய, கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் உயிரிழந்தவர்களின் நாடுகள் பட்டியலில், இத்தாலி மூன்றாவது இடத்தில் உள்ளது. இதுதவிர கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் அங்கு, 1327பேர் வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டதோடு, 243பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 87,961பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 1,168பேர் தீவிரசிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 99,023பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.