இலங்கையை சேர்ந்த லாஸ்லியா விஜய் தொலைக்காட்சியில் கடந்தாண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழக மக்களிடையே மிகவும் பிரபலமாகிவிட்டார். பிக் பாஸ் வீட்டில் கவினுடன் மிகவும் நெருக்கமாக பழகினார் லாஸ். இதனால் அவர்கள் இருவரும் காதலிப்பாக ரசிகர்கள் முடிவு செய்தனர்.
கவின் – லாஸ்லியா பெயரை ஒன்றிணைத்து கவிலியா என ஆர்மி ஒன்றையும் சமூகவலைதளங்களில் ரசிகர்கள் ஆரம்பித்தனர். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் இருவரும் திருமணம் செய்துகொள்வது பற்றி அறிவிப்பார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
https://www.instagram.com/p/B9Ou_-3B6AM/?igshid=1gfekbfme9r0a
ஆனால் கவினும், லாஸ்லியாவும் தனித்தனி டிராக்கில் தங்கள் வேலைகளை பார்க்க ஆரம்பித்துவிட்டனர். சமூகவலைதளங்களில்கூட இருவரும் பேசிக்கொள்வது கிடையாது. லாஸ்லியா தற்போது இரண்டு படங்களில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதேபோல், கவினும் லிப்ட் எனும் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் லாஸ்லியா கண்ணாடி முன் தான் இருக்கும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், வாழ்க்கை நமக்கும் பாடம் கற்பிக்க முயற்சிக்கிறது. எனவே உங்கள் தவறுகளை ஒத்துக்கொண்டு கண்ணாடி முன்பு நின்று பாருங்கள், என குறிப்பிட்டுள்ளார்.
இதைப்பார்த்த நெட்டிசன் கவினை தான் லாஸ்லியா மறைமுகமாக சொல்கிறார் என கமெண்ட் செய்துள்ளனர். கவினை காதலித்தது தவறு என்பதை தான் லாஸ்லியா குறிப்பிட்டிருக்கிறார் என ஒரு சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
https://www.instagram.com/p/B7gubkOhGWL/?igshid=1rfgdh333qksm