பாகுபலி’ நடிகர் ராணா டகுபட்டி நேற்று அவருடைய காதலியை சமூக வலைத்தளம் மூலம் அறிமுகப்படுத்தி வைத்தார். அவருடைய காதல் செய்தி பற்றி அறிந்ததும் பல முன்னணி நடிகைகள் அவருக்கு உடனடியாக வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
சமந்தா, ஸ்ருதிஹாசன், ராஷி கண்ணா, தமன்னா, ஹன்சிகா, நிஹரிகா, கிரித்தி கர்பந்தா, ஸ்ரேயா ரெட்டி, லாவண்யா, பார்வதி நாயர், காஜல் அகர்வால், பிரக்யா, கியாரா அத்வானி, அடா ஷர்மா, திவ்யதர்ஷினி என பலரும் சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்தனர்.
ஆனால், ஒரு காலத்தில் ராணாவுடன் கிசுகிசுக்கப்பட்ட த்ரிஷா இதுவரை சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்து தெரிவிக்கவில்லை. ராணாவுடன் நடிக்காதவர்கள் கூட அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் த்ரிஷா தெரிவிக்காதது ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த வாரம் த்ரிஷாவின் பிறந்தநாளுக்குக் கூட அவரை தன் ‘பழைய தோழி’ எனக் குறிப்பிட்டு ராணா வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
https://www.instagram.com/p/BZbSVlBD7j1/?igshid=fjri9qce821e