fbpx
Thursday, January 28, 2021
Home News Latest News அமெரிக்க வைத்தியசாலைக்கு இலவச பிரியாணி வழங்கிய தமிழர்...

அமெரிக்க வைத்தியசாலைக்கு இலவச பிரியாணி வழங்கிய தமிழர்…

அமெரிக்கா, நியூஜெர்சி, நியூ பிரன்ஸ்விக் பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு ஒரு தமிழர் இலவசமாக 100 பாக்கெட் பிரியாணி வழங்கினார்.நியூயோர்க்கிலும் நியூஜெர்சியிலும் அஞ்சப்பர் உணவகத்தை நடத்தி வருபவர் கண்ணன். கொரோனா காரணமாக அமெரிக்காவிலும் பல பகுதிகளில் லாக் அவுட் நடைமுறையில் இருக்கிறது.தற்போது பிரன்ஸ்விக் மற்றும் பிரின்ஸ்டன் பகுதிகளில் உள்ள அஞ்சப்பர் உணவகங்கள் திறக்கப்பட்டு பார்சல் மூலம் மட்டும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரன்ஸ்விக் ராபர்ட் வுட் ஜான்சன் ஆஸ்பத்திரியில் உள்ள டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் இதர மருத்துவ பணியாளர்களுக்கு, அஞ்சப்பர் உணவகம் சார்பாக இலவசமாக 100 கோழி பிரியாணி பாக்கெட்டுகளை கண்ணன் வழங்கினார்.பிரியாணிக்குத் துணையாக உருளைக் கிழங்கு, பீன்ஸ் பொறியல், வெங்காய ரைத்தா வழங்கப்பட்டது.உணவக ஊழியர்கள் பிரன்ஸ்விக் பகுதிக்கு நோய்த் தொற்று காரணமாக செல்ல பயந்ததால், கண்ணனே 12 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு பிரியாணி பாக்கெட்டுகளைக் கொண்டு சென்று வழங்கினார்.கண்ணனுக்கு வைத்தியசாலை ஊழியர்கள் நன்றி தெரிவித்தனர். அதற்கு பதில அளித்த கண்ணன், “நீங்கள் வைத்தியசாலையில் அற்புதமாக பணியாற்றி வருகிறீர்கள்; நாங்கள்தான் உங்களுக்கு நன்றி செலுத்த வேண்டும்” என்றார்

Alex
Alex is an Engineer with over 5 years experience in the field. Alex specialises in Engineering, Health and Agriculture.

Leave a Reply

- Advertisment -

Most Popular

“நான் ஒரு ஆரி ஆதரவாளன் இல்ல ஆனா”… விஜய் டிவி பிரபலம் வெளியிட்ட பதிவு பற்றிய பரபரப்பு தகவல்.

விஐய் தொலைக்காட்சி பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சுவார்சியமாகவும் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரங்களில் Freeze டாஸ்க் நடைபெற்றது....

Bigg Boss – 4 காதல் மன்னன் பாலாஜி முருகதாசுக்கு ரெட் காட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்படுவாரா???

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ்4 நிகழ்ச்சியில் அனுதினமும் புதுப்புது திருப்பங்கள் அரங்கேறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் பாலாஜி முருகதாசுக்கு...

Samsung Group titan Lee Kun-hee dies aged 78

Lee Kun-hee, the chairman of South Korea's largest conglomerate, Samsung Group, has died aged 78.

குழந்தைகளுக்கு ஒவ்வாமை நோய் ஏற்படாமல் இருக்க எதனை எப்போது செய்ய வேண்டும் தெரியுமா??????

முட்டையை உட்கொள்வதால் இது புரதம் மற்றும் சில ஊட்டச்சத்தை உடலுக்கு வழங்குகின்றது. இவற்றை பெற்றோர்கள் குழந்தைகள் உணவை மெல்லுவதற்கு எளிதாக இருப்பதால் , குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை...

Recent Comments