fbpx
Monday, January 18, 2021
Home Lifestyle விவாகரத்து தொடர்பில் இலங்கை சட்டம் சொல்வது என்ன?

விவாகரத்து தொடர்பில் இலங்கை சட்டம் சொல்வது என்ன?

Getting Divorce in Sri Lanka (2 min read)

இலங்கையில் பாவனையில் உள்ள சட்டங்கள் தொடர்பான தொடரில் தற்பொழுது விவாகம்,விவாகரத்து (Divorce in Tamil) தொடர்பில் ஆராயப்படுகின்றது. மக்களுக்கு தேவையான அடிப்படை சட்டங்களை இலகுவான முறையில் புரிய வைப்பதே எங்கள் பதிவுகளின் நோக்கமாகும்.

தமிழில் வெளிவந்த, வெளிவரவிருக்கும் திரைப்படங்கள், வெப் சீரிஸ் போன்றவற்றை கட்டணம் செலுத்தாமல் பார்ப்பதற்கு கீழே உள்ள அமேசான் ப்ரைம் இல் இலவசமாக இணையுங்கள்

வாழ்வுக்கு அடிப்படை குடும்பமாகும். பண்டைய காலத்தில் எல்லா சமூகங்களிலும் விசேடமாக கீழைத்தேசத்தில் இக்குடும்ப பண்பே நிலவியது. காலப்போக்கில் இடம்பெற்ற கலாச்சார,சமூகவளர்ச்சியால் இந்நிலைமை மாற்றம்பெற தொடங்கியது. மக்களும் நவீன வாழ்க்கைமுறைக்கேற்ப நகர தொடங்கிவிட்டனர்.

இதனால் நாடுகள் இத்தகைய சமூகத்துக்கு தேவையான சட்டங்களை இயற்றவேண்டியேற்பட்டது.

Contents

இலங்கையில் விவாகம்,விவாகரத்து தொடர்பான சட்டம்

இலங்கையில் பல்லின,பல மதங்களை கொண்டவர்கள் வாழ்கின்றனர். அவர்களின் கலாச்சாரத்துக்கு அமைவாக விவாக,விவாகரத்து சட்டங்கள் இருக்கின்றன. அதாவது கண்டிய சிங்கள மக்களுக்கு கரையோர சிங்கள மக்களிலிருந்து வேறுபட்ட சட்டமும் முஸ்லிம்களுக்கு அவர்களின் மதம் சார்ந்த இஸ்லாமிய சட்டமும் இருப்பதுடன் எல்லோருக்கும் பொதுவான சட்டமாக பொது திருமண சட்டமும்(General Marriage Ordinance) உண்டு.

இந்தப்பதிவில் விவாகரத்து மற்றும் அது தொடர்பான சோரம் பற்றியே ஆராயவுள்ளோம்.

பொதுச்சட்டத்தில் விவாகரத்து கோருவதற்கான காரணங்கள்?

இலங்கையில் பொதுச்சட்டத்தால் ஆளப்படுபவர்கள் விவாகரத்து பெறவேண்டுமானால் மாவட்ட நீதிமன்றில் வழக்கிட்டே தீர்வை பெற்றுக்கொள்ள முடியும்.

எனவே விவகாரத்தை பெறவிரும்பும் ஒருவர் பின்வரும் காரணங்களில் ஒன்று அல்லது பலவற்றை கூறி மாவட்ட நீதிமன்றில் விவாகரத்தை கோர முடியும்.

  1. சோரம் போதல்
  2. வன்ம உறவறுத்தல்
  3. ஆண்மையின்மை

வன்ம உறவறுத்தல், ஆண்மையின்மை போன்ற காரணங்களை பற்றி விரிவாக வேறு பதிவில் ஆராயப்படும்.

Also refer the article- இலங்கையில் சட்டத்தரணியாவது எப்படி ?

7 வருடங்கள் தொடர்ச்சியாக பிரிந்திருந்தால் விவாகரத்து கோரலாம் என்கிறார்களே… உண்மையா?

இது மிகவும் தவறான நம்பிக்கையாகும். மேலே கூறிய 3 காரணங்களை நீதிமன்றம் திருப்திப்படும் படியாக நிரூபித்தால் மட்டுமே விவாகரத்து கிடைக்கும்.

சோரம் போதல் நிகழ்ந்தமை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க வேண்டும். அனால் குற்றவியல் வழக்கொன்றை நிரூபிக்க தேவையான அளவு நிரூபணம் தேவை இல்லாவிடடாலும் ஒருபடி குறைந்த அளவு நிரூபணம் போதுமானது என சில வழக்குகளில் கூறப்பட்டுள்ளது.

சோரம் என்றால் என்ன?

சோரம் என்பதற்கு கொடுக்கப்படும் விளக்கம் என்னவெனில் தம்பதியர்களின் ஒருவர் தனது துணைவர் அல்லது துணைவியை தவிர்ந்த பிறர் ஒருவருடன் தன சொந்த விருப்பத்துடன் பாலியல் உறவில் ஈடுபடுதலாகும்.

சிலசமயத்தில் அன்பாலும் சிலசமயத்தில் தவிர்க்கமுடியாத சூழ்நிலையிலும் இது இடம் பெறலாம்.

திருமணமான ஒருவர் இன்னொரு பெண்ணையும் துணைவியாக வைத்திருக்க முடியுமா?

பல இடங்களில் விவாகம் செய்த ஒருவர் தனது மனைவியின் சகோதரியுடன் தொடர்புவைத்து குழந்தைகளும் கிடைத்துவிடுகின்றன. இங்கு சட்டப்படி பார்த்தால் சோரம் நடைபெறுவது புலனாகிறது. ஆனால் சோரத்தின் கீழ் இவ்வழக்கை தாக்கல் செய்தல் முழுக் குடும்ப மதிப்பும் பாதிக்கப்படும்.

இலங்கை சட்டத்தில் திருமணமான ஒருவர் இன்னொருபெண்ணுடனும் சேர்ந்திருக்க முடியும். இதற்கு எவ்வித தடையும் இல்லை. இங்கு முதல் மனைவி இதனை காரணமாக கூறி விவாகரத்து வழக்கு அல்லது தாபரிப்பு வழக்கு தாக்கல் செய்யலாம்.

இன்னொருத்தியுடன் சேர்ந்து வாழ்வது குற்றம் என கூறி வழக்கிடமுடியாது, அதாவது சோரம் போதல் இலங்கையில் தண்டணை சட்ட கோவையில் குற்றமாக கூறப்படவில்லை.

இந்திய சட்டத்தில் சோரம் போதல் இந்திய தண்டணை சட்ட கோவையின் பிரிவு 477இல் குற்றமாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் 2018 இந்திய உச்சநீதிமன்ற தீர்ப்பில் அந்த பிரிவு அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணாக உள்ளது எனக்கூறி நீக்கப்பட்டது.

Also refer the article – இலங்கையில் திருமணம் செய்வதற்கான தகைமைகள் எவை?

கொழும்பில் நடந்த வழக்கு

இது சட்டத்தரணி K.G.ஜான் அவர்களால் கூறப்பட்ட வழக்கு தொடர்பான அனுபவத்தை இங்கே தருகின்றோம்.

இந்த வழக்கின் நிகழ்வுகள் பின்வருமாறு அமைகின்றன. இலங்கையை சேர்ந்த வழக்காளி பிரான்சில் வசித்துவந்தார். அவரது உறவினர்கள் இலங்கையின் வடமாகாணதில் உள்ள ஊரில் வசிக்கின்றனர். இவர்களுக்கு விவாகம் நடந்தது.

பின்னர் உடனடியாக பிரான்ஸ்க்கு மனைவியை அழைக்க முடியவில்லை. அதனால் மனைவியையும் தனது உறவினரான ஒருபெண்னையும் கொழும்பில் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்க வைத்துவிட்டு பிரான்ஸ் சென்றார்.

பிரான்ஸ்க்கு செல்லத்தேவையான விசாவையும் மற்றும் தேவையான ஏனைய ஆவணப்படுத்தல் வேலைகளை செய்யவும் ஒரு நிறுவனத்தை ஒழுங்குபடுத்தி சென்றார். விசா வேலைகளை கவனிக்க மேற்படி நிறுவனத்தில் இருந்து தினம்தோறும் திணைக்களங்களுக்கு ஒருவர் செல்வது வழக்கம். சிலவேளைகளில் அவளும் அவருடன் செல்வதுண்டு.

இவ்வாறு பெண்ணும் உதவிபுரிபவரும் சென்றபோது போலீசாரால் கைதுசெய்யப்பட்டு ஒரு நாள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். கைதுக்கான காரணம் சட்டத்தரணிக்கும் தெரியவில்லை என கூறினார். இவர்கள் அன்று இரவு வராமையால் பலர் பலவாறாக பேசினார்.

இறுதியில் கணவன் தனக்கு அந்த பெண் தேவையில்லை என விவாகரத்து கோரினார். அந்த பெண் செய்த தவறு பற்றி கணவனுக்கும் தெரியாது, சட்டத்தரணிக்கும் தெரியாது. வழக்கில் பெண் விவகாரத்தை வழங்காமல் தனது குற்றமற்ற தன்மையை எடுத்துக்கூறமுற்பட்டபோதும் கணவன் மறுத்தான்.

வழக்கில் பெண்ணுக்கு பாரிய பிரிமினை பணத்துடன் விவாகரத்து வழங்கப்பட்டது.

சோரத்துக்கான ஆதாரங்களை நிரூபித்தலின் கடினத்தன்மை

விவாகரத்துக்கான காரணங்களை நிரூபிப்பது மிகக்கடினம். அதனை ஊகத்தின் மூலமே நிரூபிக்க வேண்டும்.

உதாரணமாக ஒரு ஆணும் பெண்ணும் தனியாக ஒரு இடத்துக்குள் நுழைகிறார்கள் என்றால் அங்கு என்ன செய்கிறார்கள் என நாம் காணமுடியாது. சிலவற்றை ஊகிக்கலாம்.எனினும் ஊகம் பிழையாகவும் இருக்கலாம்.

Also refer the article – பாலியல் குற்றங்கள் என்றால் என்ன? – சட்ட விளக்கம்

பொது திருமண சட்டத்தின் தற்போதைய நிலை

விவாகரத்து சட்டம் இறுக்கமானது. தற்போதைய சூழ்நிலைக்கேற்ப இந்த சட்டம் திருத்த ப்படவேண்டும்.

திருமணத்தின் புனிதத்தை உணர்ந்தால் மட்டுமே தவறான உறவு முறைகளை மக்கள் நாடமாட்டார்கள். தற்பொழுது திருமணத்துக்கான முதல் படி மொபைல் மூலமோ அல்லது பேஸ்புக் மூலமோ தொடக்கி விவாகரத்தில் முடிவதை நாம் காணலாம்.

விவாகரத்துகளின் எண்ணிக்கை மற்றும் கருக்கலைப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பானது சோரம் போதலின் விளைவை காட்டுகின்றது.

நாம் எப்படி வாழ வேண்டும்?

விவாகம் செய்த சிலர் தேவையின் பொருட்டு தாம் தொழில் புரியும் அதிகாரிகளுடன் முறையற்ற உறவில் இருப்பதை கேள்விப்பட்டிருப்போம். இதன் காரணமாக இடம்பெறும் கொலைகள் வரை பத்திரிகையில் படித்திருப்போம்.

இவாறான நிகழ்வுகள் எங்கள் வாழ்க்கையில் இடம்பெற்றால் அது எமது சந்ததிவரை நீளக்கூடிய அவப்பேராகும் என சகலரும் உணரவேண்டும்.

மேற்படி பதிவில் உள்ள தகவல்கள் மனித உரிமைகள் மேம்பாட்டுக்கான நிலையம் வெளியிட்ட “சட்டமும் நீங்களும்” எனும் கையேட்டில் குறிப்பிடப்பட்ட விடயங்களை உள்ளடக்கியது.

சட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட எமது பதிவுகளை படிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள்

மேலும் உங்களுக்கு இந்த பதிவு தொடர்பில் சந்தேகங்கள் இருப்பின் கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் இல் கேள்விகள் கேட்கமுடியும்.

எங்களுடைய பதிவுகளை மின்னஞ்சலில் பெறுவதற்கு கீழே உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவுசெய்யுங்கள்

நீங்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறீர்கள் என்பதற்கான அறிகுறிகள்.

நீங்கள் மனச்சோர்வடைந்தால் இந்த கட்டுரையைப் படியுங்கள்

Original article by DocuAgency Document Services – for certificates and legal translations services. Re-posted with permission from original author. For more articles by original author visit – www.docsagency.com

Leave a Reply

- Advertisment -

Most Popular

“நான் ஒரு ஆரி ஆதரவாளன் இல்ல ஆனா”… விஜய் டிவி பிரபலம் வெளியிட்ட பதிவு பற்றிய பரபரப்பு தகவல்.

விஐய் தொலைக்காட்சி பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சுவார்சியமாகவும் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரங்களில் Freeze டாஸ்க் நடைபெற்றது....

Bigg Boss – 4 காதல் மன்னன் பாலாஜி முருகதாசுக்கு ரெட் காட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்படுவாரா???

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ்4 நிகழ்ச்சியில் அனுதினமும் புதுப்புது திருப்பங்கள் அரங்கேறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் பாலாஜி முருகதாசுக்கு...

Samsung Group titan Lee Kun-hee dies aged 78

Lee Kun-hee, the chairman of South Korea's largest conglomerate, Samsung Group, has died aged 78.

குழந்தைகளுக்கு ஒவ்வாமை நோய் ஏற்படாமல் இருக்க எதனை எப்போது செய்ய வேண்டும் தெரியுமா??????

முட்டையை உட்கொள்வதால் இது புரதம் மற்றும் சில ஊட்டச்சத்தை உடலுக்கு வழங்குகின்றது. இவற்றை பெற்றோர்கள் குழந்தைகள் உணவை மெல்லுவதற்கு எளிதாக இருப்பதால் , குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை...

Recent Comments