fbpx
Friday, January 22, 2021
Home Technology யார் இந்த YesPrabhu? முதல் யாழ் யூடியூபர் ஆ? தொழில்முனைவோர் ஆ?

யார் இந்த YesPrabhu? முதல் யாழ் யூடியூபர் ஆ? தொழில்முனைவோர் ஆ?

உங்களைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் ?

எனது பெயர் பிரதிபன்.எங்கள் வீட்டில் என்னைப் பிரபு என அழைப்பார்கள் . தொடக்கக் காலத்தில் நான் முகநூல் போன்ற எந்த ஒரு சமூக வலைத்தளத்திலும் இல்லை. பிறகு எதிலாவது கணக்கு வைத்திருக்கலாம் என நினைத்து , படவரியில் கணக்கு தொடங்கினேன்.

அதில் நிறையப் பேர் வித்தியாசமான புகைப்படங்களை பதிவிட்டு வந்தனர். அதை எல்லாம் பார்க்கலாம் என நினைத்து நான் இதில் கணக்கு தொடங்கினேன். இதில் பெயர் என்ன வைக்கலாம் என யோசித்து இருந்தேன். பிரபு என்ற பேரில் நிறையக் கணக்குகள் இருந்தன.எனவே வேறு என்ன பெயர் வைக்கலாம் என் யோசிக்கும் பொது “Yes” என்ற பெயர் வைக்கலாம் எனத் தோன்றியது. இது எல்லோரிடத்திலும் நல்ல வரவேற்பைத் தந்தது. அப்படி தான் இப்பெயர் வந்தது.

உங்கள் குடும்பம், உடன் பிறந்தோர் , பள்ளி வாழ்க்கை குறித்துச் சொல்லுங்களேன் ?

என் குடும்பத்தில் நான், அம்மா, தம்பி , தங்கை உள்ளனர். அப்பா இல்லை. நான் பயின்றதெல்லாம்  வைதிசஸ்வரா கல்லூரில் தான். பிறகு சி.எம்.ஏ (சர்டிபிகேட் மேனேஜ்மென்ட் ஆஃப் அக்கௌண்டன்ட்ஸ்)  படித்தேன். பின் ஜாவா,சி (java, c) போன்ற கணினி பாடங்கள் படித்தேன். பின் கொழும்பில் கிளை மேலாளராகவும் ,தகவல் உள்ளீடு இயக்குநராகவும் பணிபுரிந்தேன்

உங்கள் படவரி (instagram ) முகப்பு விவரங்கள் , நீங்கள் ஒரு தொழில் முனைவோர் என்பதை காட்டுகிறது ? நீங்கள் மேற்கொண்ட தொழில்கள் யாவை ?

என்னுடைய நிறுவனத்தின் பெயர் ஜஸ்ட் ப்ரோபெரெட் லிம்மிடேட் . அந்நிறுவனம் 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பதிவு செய்யப்பட்டது.

இந்த இணையத்தளமானது அனைத்து சட்டபூர்வமான சேவைகளும் பொருட்களும் விற்பனை செய்யும் இணையத்தளம் ஆகும். சில இணையத்தள முகவர்கள், சில வகையான பொருட்களையும் சில வகையான சேவைகளையும் மட்டுமே விற்பனை செய்வார்கள். நாங்கள் அவ்வாறு அல்லாமல் எல்லா சேவைகளையும் ஒரே இடத்தில பெற்றுக்கொள்ள ஏதுவாய் இந்த இனைய தளம் தொடங்கப்பட்டது. எல்லா தேவைகளையும் ஒரே இடத்தில நிறைவேற்றி கொள்ள இந்த இணையத்தளம் பயன்படுகிறது.மக்களுக்கு என்ன தேவையோ அதை நிறைவேற்றி கொடுப்போம்.

MY JAFFNA .lk   

உங்களுக்கு இந்த எண்ணம் எப்படி வந்தது என்பது குறித்தும் , இதில் தொடர்புடைய மக்களை பற்றியும் சொல்லுங்களேன்.

MY JAFFNA .lk என்பது நான் உருவாக்கியதாகும். இது முற்றாக என்னுடைய வேலை ஆகும். இதில் வேறு யாருக்கும் தொடர்பு இல்லை. இதில் வழங்கப்படும் சேவைகள் அனைத்தும் எனது கட்டுப்பாட்டின் கீழ் இயங்குவதாகும்.இது ஒரு தனி மனிதருடைய நிறுவனம் மற்றும் இணையத்தளம் ஆகும்.

இந்த myjaffna lk வில் மற்ற வணிகர்களும் வணிகம் செய்ய இயலுமா அல்லது இது தங்கள் சேவை மற்றும் பொருட்கள் மட்டும் வழங்க தொடங்க பட்டதா ?

இந்த இணையத்தளத்தில் தருகின்ற சேவைகள் அனைத்தும் என்னால் வழங்கப்படுவதாகும். ஒருவர் என்னிடம் ஒரு வலைத்தளம் உருவாக்க அணுகினால் அதை நான் செய்ய முற்படுவேன், என்னால் முடியாத சில சேவைகளை எனது குழுவிடம் கொடுத்து செய்து முடித்து என் சார்பாக எங்கள் வாடிக்கையாளர்களுக்கு   செய்து கொடுக்க படும். உதாரணமாக ஒரு ப்ரெஞ்சு மொழிபெயர்ப்பு சேவைக்காக  எங்களிடத்தில் அணுகினால் , அதை எங்களால் செய்ய இயலாமல் போனாலும் , எங்கள் குழவின் மூலம் அதை செய்ய தகுதியான நபர்கள் மூலம் செய்து தரப்படுகிறது. எனவே jaffna.lk நேரடியாகவும் , மறைமுகமாகவும்  சேவைகளை வழங்குகிறது. ஆனால் jaffna.lk முழுக்க முழுக்க எனது கட்டுபாட்டில் இயங்குவதாகும். அதில் விற்கப்படுகிற அணைத்து பொருட்களும் எனது பொருட்களாகும்.

இது jaffna.lk வில் இருந்து மாறுபட்டதா ?

jaffna.lk ,myjaffna.lk இரண்டும் எங்களுடையதாகும். ஆனால் jaffna.lk என்ற இனையதளத்தை இலங்கை சட்டதின்படி ஒரு மாவட்டத்தின் பெயரை பயன்படுத்த இயலாது. எனவே myjaffna.lk என்ற இணையத்தளத்தை கொண்டு பயன்படுத்துகிறோம்.இது தவிர்த்து  jaffna.lk ,myjaffna.lk என்ற இரண்டு  இனையத்தளங்களும்  எங்களுடையதாகும்

Covid 19 உங்கள் சொந்த வாழ்வினையும் , தொழிலையும் எவ்வாறு பாதிக்கின்றது ?

உண்மையை சொல்ல போனால் covid 19 எங்கள் வணிகத்தை பெருமளவு உயர்த்தி இருக்கிறது. இது எங்கள் வணிகத்தை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை, மாறாய் இது எங்கள் தொழிலை மேம்படுத்தி உள்ளது. நாங்கள் இந்த இணையதளத்தை covid தொடங்கிய பிறகு தான் , தொடங்கினோம். ஆனால் விற்பனை ரீதியாக இது எங்களை பாதித்து உள்ளது. சில பொருட்களை குறிப்பிட்ட நாளில் பெற முடிவதில்லை. அந்த விதத்தில் இது ஒரு பாதிப்பு தான். சேவை நோக்கில் பார்த்தால் எங்கள் தொழில் பாதிக்க படவில்லை.

நீங்கள் எப்போது You tube கானொளிகளை தொடங் கினீர்கள் ? அதிலும் குறிப்பாக yesprabhu records ?

YouTube 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. எனக்கென்று ஒரு அடையாளமாக இது தொடங்கபட்டது.ஆனால் இது இத்தகைய வரவேற்பை பெறும் என்று நான் நினைக்கவில்லை.இதுவரை இன்று லட்சம் மக்கள் எனது கானொளிகளை பார்த்துள்ளனர்.1020 subscribers இருக்கிறார்கள். இது பயணம் தொடர்பான கானொளிகளை பதிவேற்ற தொடங்க பட்டது. பின் நான் அதில் உணவகங்கள் குறித்த கானொளிகளை பதிவிட தொடங்கியதும் நிறைய மக்கள் அதை பார்க்க தொடங்கினர். நான் நிறைய பயணம் குறித்த கானொளிகளை பதிவேற்றி இருந்தாலும் , உணவு குறித்து பதிவு செய்த கானொளிகளே நிறைய பார்வையாளர்களை பெற்று தந்திருக்கிறது.

நீங்கள் வேறு பல வலையொலி நிகழ்ச்சிகளிலும் காணப்படுகின்றீர்கள். ஆயினும் உங்கள் மனம் கவர்ந்தது எது ?

நான் டி என் குருமா என்ற ஒரு வலையொலி நிகழ்ச்சிக்காக  ஒரு குறும்படம் நடித்தேன். pixel of sodium flim என்ற வலையொலி நிகழ்ச்சியும் செய்து இருக்கிறேன். எல்லா குறும்படங்களும் சிறப்பான தாகவே இருந்தது. எதிலும் குறை சொல்ல இயலாது.

உங்கள் MyJaffna.lk என்பது யாழ்ப்பாணத்தில் முதலும், முழுமையாகவும்  செயல்படும் இணையவழி வலைத்தளங்களில் ஒன்றாகும். ஒரு யாழ்ப்பாணியருக்கு இதில் சில பகுதிகள் முழுமையாக சொந்தமானவைகளாய்  இருக்கலாம்.நீங்கள் யாழ்ப்பாணத்தில் ஒரு ஈ-காமர்ஸ் சந்தையில் முன்னணியில் இருக்கும் ஒருவர் என கூறலாம். இதைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன?

அவ்வாறு கூறிவிட இயலாது.ஆயினும் அந்த நிலையை எய்த முயற்சித்து வருகிறோம்.என்னுடைய நோக்கமானது யாழ்ப்பாண மக்கள் மட்டுமின்றி , இலங்கை மக்கள் அனைவருக்கும் அவர்களுக்கு தேவையான அனைத்து சட்டபூர்வமான சேவைகளையும் ஒரே இடத்தில் பெற்று கொள்ள ஏதுவாய் வடிவமைக்கும் நோக்கினை கொண்டுள்ளோம். கட்டிட கலை குறித்த விவரங்கள் அறிய தனி இணையத்தளம் இருக்கும், சமையல் குறித்த விவரங்கள் அறிய தனி இணையத்தளம் இருக்கும். அவ்வாறு இல்லாமல் உலகில் உள்ள எல்லா சேவைகளையும் ஒரே இடத்தில் பெற்றுகொள்ள எதுவாய் இந்த இனையத்தளம் வடிவமைக்க பட்டுள்ளது.ஓட்ட போட்டிக்கு தயாராக உள்ள ஒரு வீரனை போல் தான் , எங்கள் இப்போதைய நிலை. எதிர் காலத்தில் , ஒரு முன்று ஆண்டுகளில் சிறந்த பலனை பெருவோம் என்ற நம்பிக்கையில் உள்ளோம். யாழ்பாணம் மட்டுமின்றி இலங்கை முழுவதிற்குமான ஒரு சிறந்த வணிக தளத்தை உருவாக்க எண்ணம் கொண்டு உள்ளேன். அதை நிச்சயம் செய்வேன் என்ற நம்பிக்கை உள்ளது. ஆண்டவனும் இதற்கு துணை நிற்பார் என நம்புகிறேன்.

My jaffna.lk ஒரு நிண்ட நெடும் தயாரிப்புகளையும் ,சேவைகளையும் கொண்டுள்ள ஒரு நிறுவனமாகும். வாழை இலை வாங்குவதில் தொடங்கி சிங்கப்பூரில் நீச்சல் பயிற்சிக்கான அனுமதி சீட்டு வாங்குவது வரை அனைத்தையும் உள்ளடக்கியதாய் இருக்கிறது. இவை அனைத்தும் MYjaffna.lk வால் வழங்கப்படுவது. ஒரு தனியொரு நபராக இருந்து கொண்டு இந்தகைய நிர்வாகம் எவ்வாறு சாத்திய படுகிறது ?

இது எனக்கு ஒரு கடினமான ஒரு வேலையாக தோன்றவில்லை. நான் இதை ரசித்து செய்கிறேன்.நிறைய மக்கள் என்னிடத்தில் கேட்பதுண்டு. இதை நீங்கள் தனியாக செய்கிறீர்களா என்று ? ஆம் நான் தனியாக தான் செய்கிறேன். இதில் எனக்கு எந்த ஒரு சிரமமும் இல்லை. இந்த தளம் மூலம் பல தொழிலார்களை நியமிக்க திட்டம் கொண்டுள்ளேன். இப்போது உள்ள நிலையில் இந்த வலைதளத்தை நான் ஒருவனாக நிர்வகிப்பது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது.நன்றி

உங்களுக்கு   காதலி அல்லது முன்னால் காதலி யாரேனும் உண்டா ? அல்லது ஏதேனும் பிரபலத்தின் மேல் ஈர்ப்பு உள்ளதா ?

அப்படி யாரும் இல்லை. பிரபலத்தின் மேல் ஈர்ப்பு என கேட்கும் பட்சத்தில் ஐஸ்வர்யாராய் என்று சொல்லலாம்.

உங்கள் வலைதளம் போலவே உங்களது வலையொலி உள்ளடக்கங்களும் பல்வேறு வகை சார்ந்த ஒன்றாக அமைகிறது. பயணம் , இளைஞர்களை சார்த்த காணொளிகள் ,குறும்படங்கள் என பல. ஆயினும் இதில் எது உங்களுக்கும் உங்கள் ரசிகர்களுக்கும் பிடித்தது. இதில் இதை செய்ய நீங்கள் பெரிதும் விரும்புகிறீர்கள் ?

எனக்கு மிகவும் பிடித்தது வலைத்தளம் குறித்தே ஆகும்.இதுவே தவிர்த்து நான் நிறைய நாடுகளுக்கு செல்ல விரும்புவேன்.அங்கு சென்று பல காட்சிகள பதிவு செய்ய ஆசை. அதை பணம் செய்யும் நோக்கில் இல்லாமல் , மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள எனக்கு ஆர்வம். நான் எல்லாத்தையும் படிக்கிறேன் , விரும்புகிறேன். தொழில் என்று வரும் பொது MyJaffna.lk. வேட்கை எனும் பட்சத்தில் வலையொலி.

நீங்கள் இதுவரை பயணம் செய்த நாடுகளில் உங்களுக்கு பெரிதும் பிடித்த நாடு எது ?

நான் இந்தியா, சிங்கபூர் ,மலேசியா போன்ற மூன்று நாடுகளுக்கு பயணித்திருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த நாடு சிங்கபூர். இந்தோனேசியாவிற்கும் பயணித்திருக்கிறேன்.  இந்தோனேசியாவும் பிடிக்கும்.

என் சிங்கபூர் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் ?

அவர்களது நிர்வாகம் எனக்கு பிடிக்கும். ஐம்பத்து மூன்று லட்சம் மக்களை ஒரு சிறிய இடத்தில், அதாவது யாழ்பாணத்தின் ஆரவாசிகள் என சொல்லும் மக்கள் இருக்கும் பிரதேசத்தின் அளவில் உள்ள ஒரு நாட்டில்    மிக அழகாகவும் , நேர்த்தியாகவும் ஐம்பத்து மூன்று லட்சம் மக்களை கொண்டு உலகின் மூன்றாவது பொருளாதர வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றி இருக்கிறார்கள். பார்பதற்கு நிறைய தலங்களை  கொண்ட நாடு.சுற்றுலா பயணிகளை மிகவும் கண்ணியத்துடன் நடத்த கூடிய ஒரு நாடு. ஆதலால் எனக்கு பிடிக்கும்.

பெண்களிடத்தில் உங்களுக்கு மிகவும் பிடித்த பண்பு யாது ?

பெண்கள் இயல்பாகவே மிகவும் நல்ல குணவதியாக இருக்கிறார்கள்.

உங்களுக்கு முழுவதும் மிழித்த முகம் பிடிக்குமா அல்லது மீசையுடன் மட்டும் அல்லது மீசையுடன் கூடிய முழுமையான தாடி பிடிக்குமா ?

முழு தாடியும் மீசையும் வைத்திருக்க பிடிக்கும்.

கீழ்க்கண்ட நபர்களுக்கு உரித்தான பட்டங்களை தருக , அணைத்து பட்டங்களும் ஒருமுறை மட்டுமே உபயோகிக்க வேண்டும்.

Most Talented- Female

Niluja

Beautiful- Female

Sarmi Sarah

Trendsetting- Female

Honest- Female

VJ Dhanujay

Creative- Female

Yaara Allen

Talented- Male

Yasodharan

Handsome- Male

Varun

Trendsetting- Male

Aadhil Osman

Creative- Male

Teejay

அஜித், விஜய்,சிம்பு,தனுஷ்,சந்தானம்- உங்களுக்கு மிகவும் பிடித்தமான போக்கில் வரிசை படுத்துக.

 1. விஜய்
 2. தனுஷ்
 3. சிம்பு
 4. சந்தானம்
 5. அஜித்

நயன்தாரா ,காஜல் , கீர்த்திசுரேஷ், சாய் பல்லவி, இதில் உங்களுக்கு மிகவும் பிடித்தமான போக்கில் வரிசை படுத்துக.

 1. சாய் பல்லவி
 2. கீர்த்திசுரேஷ்
 3. காஜல்
 4. நயன்தாரா.

உங்களுக்கு மிகவும் பிடித்த ஐஸ் கிரீம் (பணி கூழ் ) பண்டங்களை வரிசை படுத்துக. கார்னிவல் ஐஸ் கிரீம்,  ரியோ ஐஸ் கிரீம்,  பாஸ்கின் ரோபின்ஸ் .

 1. ரியோ ஐஸ் கிரீம்
 2. பாஸ்கின் ரோபின்ஸ்
 3. கார்னிவல் ஐஸ் கிரீம்.

கீழ் வரும் இடங்களில் உங்கள் நண்பர்களோடு நீங்கள் செல்ல நினைக்கும் தளங்களை குறிப்பிடுக. காலே பேஸ் கிரீன் , எம் சி , கொழும்பு சிட்டி சென்டர், ஒன் காலே பேஸ். இதில் உங்களுக்கு மிகவும் பிடித்த இடத்தை பகிர்க.

 1. ஒன் காலே பேஸ்- ராட்சச வளாகம்
 2. கொழும்பு சிட்டி சென்டர்-  அமைதி
 3. காலே பேஸ் கிரீன் – நன்று

சமீபத்தில் ஜப்னாவில் உங்களுக்கு நடந்த வேடிக்கையான விடயத்தை குறிப்பிடுக.

நான் நகரத்திற்கு ஏதோஒன்று வாங்க சென்றிருந்தேன். அப்போது நான் என் தலைகவசத்தை அணிய மறந்து விட்டேன் . என்னையும் சேர்த்து யாரும் அதை கவனிக்க வில்லை. இது மிகவும் வேடிக்கையானது என கருதுகிறேன்.

உங்களுக்கு பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல அனுமதி கிடைத்தால் செல்வீர்களா ? ஆம் எனில் உங்களுடன் அழைத்து செல்ல விரும்பும் மூன்று ஊடக துறையை சார்ந்த நபர்களை குறுப்பிடுக

ஆம் , நான் நிச்சயம் செல்வேன்.

 • யசோதரன்
 • நவீன் அண்ணா
 • சார்மி சாரா

இந்த நேர்காணல் ஊடாக என்னைப்பற்றியதும் எனது திறமை பற்றியதுமான தகவல்களை வெளிப்படுத்த சந்தர்ப்பத்திற்காக rise.lk. எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

Yaar intha YesPrabhu

Leave a Reply

- Advertisment -

Most Popular

“நான் ஒரு ஆரி ஆதரவாளன் இல்ல ஆனா”… விஜய் டிவி பிரபலம் வெளியிட்ட பதிவு பற்றிய பரபரப்பு தகவல்.

விஐய் தொலைக்காட்சி பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சுவார்சியமாகவும் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரங்களில் Freeze டாஸ்க் நடைபெற்றது....

Bigg Boss – 4 காதல் மன்னன் பாலாஜி முருகதாசுக்கு ரெட் காட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்படுவாரா???

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ்4 நிகழ்ச்சியில் அனுதினமும் புதுப்புது திருப்பங்கள் அரங்கேறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் பாலாஜி முருகதாசுக்கு...

Samsung Group titan Lee Kun-hee dies aged 78

Lee Kun-hee, the chairman of South Korea's largest conglomerate, Samsung Group, has died aged 78.

குழந்தைகளுக்கு ஒவ்வாமை நோய் ஏற்படாமல் இருக்க எதனை எப்போது செய்ய வேண்டும் தெரியுமா??????

முட்டையை உட்கொள்வதால் இது புரதம் மற்றும் சில ஊட்டச்சத்தை உடலுக்கு வழங்குகின்றது. இவற்றை பெற்றோர்கள் குழந்தைகள் உணவை மெல்லுவதற்கு எளிதாக இருப்பதால் , குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை...

Recent Comments